யாழில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டபார்ர்கள் திடிரென தூதரகத்தை நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த்து.

சிறிது நேர போராட்டத்தின் பின்னர் மீனவர்கள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

திடீரென மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றதனால் உடனடியாக அதிகமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் மீனவர்கள் தொடர்ந்தும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் இருந்து மீனவர்கள் வருகைதந்து ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles