யாழில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தற்கொலை என்று சந்தேகிக்கப்படுவதுடன், உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles