யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த இளைஞர், வன்முறைக் கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஆயினும் வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு இந்த வன்முறைக் கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் உரிய முறையில் முன்னெடுத்து வருவதாகவும் ஆயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.