யாழில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் களத்தில்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள், 23 சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும், அவற்றில் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களாக 396 பேர் போட்டியிடவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles