இரு நபர்களை கொலை செய்யும் நோக்கில் ரி-56 ரக துப்பாக்கி சகிதம் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின்கீழ் வாகனங்களை பரிசோதிக்கும்போது இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.
வாகனத்தை சோதனையிட்டபோது ரி – 56 ரக துப்பாக்கி, 28 தோட்டாக்கள், இரு வாள்கள், இரு கைக்குண்டுகள் மற்றும் 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீரப்பன் என்றழைக்கப்படும் ஜனக சில்வா என்பவரும், பாஜா என்றழைக்கப்படும் லஹிரு மதுசங்க ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
46 மற்றும் 49 வயதுகளுடைய இவர்கள் அங்குருவாதொட பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் மத்துகம நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.











