யுவதிகள் இடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் – இருவர் கைது!

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தி னர் என்ற குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப்பகுதி யில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந் தன. அந்தப் பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டடங்களின் காரண மாகவும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என வவுனியா தெற்குப் பிரதேச சபைக்கு சம்பந்தப்பட்ட வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள் ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலி ஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற் கொண்டவர்கள் என்று கூறப்படும் 30 மற்றும் 25 வயது டைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள் ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் தாங்கள் முற்படுத்தவுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்க ளில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத் தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலகம் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளது என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles