தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று விடுத்த அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். ” காசு இல்லை எனக்கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது.
ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.” – என்றார் மஹிந்த.