ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.