ரணிலுக்கு பதில் ருவன்?

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ருவன் விஜயவர்தனவை நியமிப்பது தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் அவர் நியமிக்கப்படவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தற்போது செயற்பட்டு வருகின்றார்.

அவ்வாறு ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவருக்கு சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ருவன் விஜேவர்தன சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles