ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கமுடியாது என கட்சி தீர்மானித்தால் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அவரிடம் எழுப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,
கேள்வி – வேட்பாளர் யார்?
பதில் – திங்கட்கிழமை (29) தீர்மானிப்போம். எனவே, அதுவரை பொறுமை காக்கவும்.
கேள்வி – தம்மிக்க பெரேராவா?
பதில் – அவர் எமது பக்கம் இருப்பவர். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் அறிவித்துள்ளாரே?
பதில் – நல்ல விடயம்.
கேள்வி – அவருக்கு ஆதரவு வழங்கப்படுமா?
பதில் – இல்லை…இல்லை…அது பற்றி கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். ஆதரவு வழங்க வேண்டுமென கட்சி முடிவெடுத்தால் அதனை முழுமையாக வழங்குவோம். அவ்வாறு இல்லாமல் வேட்பாளர் ஒருவரை கட்சி களமிறக்க வேண்டும் என தீர்மானித்தால் அதன் பிரகாரம் முடிவு எடுக்கப்படும்.
கேள்வி – கட்சியில் இருந்து சிலர் வெளியேறும் நிலை ஏற்படும் அல்லவா?
பதில் – அவர்களுக்கும் சுதந்திரம் இருக்கின்றது அல்லவா?
கேள்வி – ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமாறு சாகல ரத்னாயக்க கோரிக்கை விடுத்தாரா?
பதில் – இல்லை.