ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக உருவாகியுள்ள ‘புதிய கூட்டணி’ எனும் பெயரிலான அரசியல் கூட்டணியின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு, ஹைட்பார்க்கில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரயதர்சன யாப்பா, நிமல்லான்சா உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டணியில் மேலும் சில உறுப்பினர்களும், அமைப்புகளும் இதன்போது இணையவுள்ளன.