ரணில் களமிறங்கினால் சஜித் போட்டியிடமாட்டார்! அடித்து கூறுகிறது ஐ.தே.க.!!

” ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என்பது உறுதி. அன்றும் இதை கூறினேன். இன்றும் இதை உறுதியாக கூறுகின்றேன்.”

இவ்வாறு மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் களமிறங்குவார் என சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையிலேயே ஐதேக செயலாளர் நேற்று மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

” கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினைவந்தபோது கருஜயசூரியவை பலிக்கடாவாக்கிவிட்டு சஜித் ஓடினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின்போது டலஸை பலிகடாவாக்கிவிட்டு சஜித் தப்பித்தார். எனவே, அவர் போட்டியிடமாட்டார்.” எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை ஒக்டோபரில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles