” ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்கள் சமரசம் பேசிவருகின்றனர் என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சஜித்தையும், ரணிலையும் ஒன்றிணைப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்களும், பிரமுகர்களும் முயற்சித்துவருகின்றனர் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. எந்தவொரு தூதுவரோ அல்லது வெளிநாட்டு பிரமுகரோ இது சம்பந்தமாக என்னுடன் பேச்சு நடத்தவில்லை. உள்நாட்டில் இருந்தும் எவரும் பேச்சு நடத்தவில்லை. திட்டமிட்ட அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டோ இவ்வாறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மக்கள் சக்தி எம்பக்கமே உள்ளது. டீல் அரசியல் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமையும்.” – என்றார்.










