ரத்வத்தை தோட்டத்தில் தகர்க்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக 14 பேர்ச் காணி!

மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தின் உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கி தகர்த்தெறியப்பட்ட வீட்டுக்கு பதிலாக அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகனின் குடும்பத்தார் ஆகிய இருதரப்புக்கும் தலா 7 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட உதவி முகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எக்கடுவ பெருந்தோட்ட யாக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ள தோட்ட உதவி முகாமையாளர், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் காவலாளி உள்ளிட்ட மூவருக்கு எதிராக மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக் கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் குழு அறை ஒன்றில் இடம்பெற்ற பெருந்தோட்டத் துறை அமைச்சு தொடர்பான கலந்துரையாடலின் போது மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பெருந்தொட்ட கைத்தொழில் அமைச்சு தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம் பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நான் மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் இரண்டு தொழிலாளர் குடும்பங்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தகர்த்தெறியப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலைவரம் என்ன என்பது குறித்து வினவு இருந்தேன்.

இதற்கு பதிலளித்த எல்கடுவ பெருந்தோட்ட யாகத்தின் தலைவர் கூறுகையில்,
சம்பவத்துடன் தொடர்புடையவரான தோட்ட உதவி முகாமையாளர் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகள் நிர்வாக மட்டத்தில் இடம் பெற உள்ளன.

மேலும் உதவி உதவாமையாளருக்கு எதிராக மாத்தலை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அத்துடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கும் அவரது மகனது குடும்பத்தாருக்கும் என தலா ஏழு பேச்சஸ் காணிகள் வழங்கப்பட்டுள்ளன எனக்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கந்தை நிவார போலீஸ் நிலைய பொது அதிகாரியிடம் வினவிய போது அவர் கூறியதாவது, வீட்டை உடைத்து சேதப்படுத்தி தகர்த்தெறிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த தோட்ட உதவி முகாமையாளர், காவலாளி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஆகிய மூவருக்கும் எதிராக மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட மூவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதைவேலை குறித்த வழக்கானது நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எது எப்படி இருப்பினும் பெருந்தொட்ட தொழிலாளர்கள் இவ்வாறு தோட்ட நிர்வாகங்களால் மோசமாக நடத்தப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் வழங்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கு எதிரான நடவடிக்கை மேலும் கடினமாக்கப்படும் என்பதையும் கூறி வைக்க வேண்டும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles