கொழும்பிலிருந்து பதுளைக்குவந்து கொண்டிருந்த பொடிமெனிகே ரயிலை விபத்துக்குள்ளாக்க இளைஞர்கள் சிலர் முயன்றபோதிலும், ரயில் சாரதியின் பாரிய முயற்சியினால் ஏற்படவிருந்த அனர்த்தம் மயிரிழையில் தடுக்கப்பட்டது.
தெமோதரை–எல்ல ரயில் பாதையில் 41ஆவது சுரங்கப் பாதையருகே, நேற்று இவ் விபத்து ஏற்படவிருந்தது.
எல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், ரயில் பாதையில் பெரும் பாறைக் கற்களை குவித்து,பொடிமெனிகே ரயிலைதடம் புரள வைக்கமுயற்சிசெய்திருந்தனர்.
ரயிலை செலுத்தி வந்த சாரதி, ரயில் பாதையில் கற்பாறைகள் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பாரிய முயற்சிகளை மேற்கொண்டு, ரயிலைநிறுத்தி, ஏற்படவிருந்த பாரிய விளைவுகளை தடுத்துநிறுத்தினார்.
ரயில் நிறுத்தப்பட்டதும், ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட முயற்சியினால் தப்பியோடிய ஒரு இளைஞன் பிடிக்கப்பட்டு, எல்லபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட இந் நபர் விசாரணைக்குற்படுத்தல் போது, ஏனைய மூன்று இளைஞர்களுடன், ரயிலை விபத்துக்குள்ளாக்கி கொள்ளையில் ஈடுபடமுயற்சித்தமை தெரியவந்துள்ளது.
வழங்கிய தகவலின் பிரகாரம் ஏனைய மூன்று இளைஞர்களையும் கைதுசெய்ய,எல்ல பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.
விபத்தைதடுத்த ரயில் சாரதியைபயணிகள் பலரும், இரயில் நிலைய அதிபரும் வெகுவாகப் பாராட்டியதையும்,நன்றிதெரிவித்தமையையும் அவதானிக்கமுடிந்தது.
