ரயில்வே திணைக்களத்துக்கு 2021 இல் 1000 கோடி ரூபா நஷ்டம்!

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில் 400 கோடி ரூபாவையே திணைக்களம் வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரயில் கட்டணத்தை அதிகரித்தால் நட்டத்தை ஓரளவு நிவர்த்திசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே திணைக்களமானது இதற்கு முன்னர் வருடமொன்றுக்கு 8 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த வருடத்தில் வருமானம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் அடிக்கடி அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில் இறுதியாக 2018 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இதுவரை ரயில் கட்டண அதிகரிப்பு எதுவும் இடம்பெறவில்லை. ரயில் சேவையை மக்கள் சேவையாக முன்னெடுத்துச் செல்வதானால் இலாபம் நட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles