ரயில் தடம்புரள்வு: மலையக ரயில் சேவை பாதிப்பு

டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவுள்ளது.

கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று 15ம் திகதி புறப்பட்டு வந்த புகையிரதம் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோககி வரும் புகையிரதங்கள் ஹட்டன் புகையிரத நிலையம் வரையும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதங்கள் நானுஓயா வரையும் மட்டுப்படுத்தப்பட்டு பஸ் ஊடாக பயணிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த புகையிரதத்தினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் இன்று காலை வரை வழமைக்கு திரும்பவில்லை. இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்

 

Related Articles

Latest Articles