ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த உடன் நடவடுக்கை எடுக்குமாறு, ஐ.நா.பொதுச்சபையிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்து பேச்சில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்த்துள்ளார்.
“இன்று உக்ரைனுக்கு நடப்பது நாளை ஏனைய நாடுகளுக்கும் நடக்கலாம். எனவே நாம் அணிகளாக பிரிந்து நிற்பதை விடுத்து ,செயலில் இறங்க வேண்டும்.” என ஜேர்மனியின் ஐ.நாவுக்கான பிரதிநிதி ஐ.நா.பொதுச்சபையில் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா துருப்புகளை நிறுத்தியிருப்பது முட்டாள்தனமானது என ஐ.நா.பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.