ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை!
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ருணிலின் அழைப்யபின் பெயரில் அவரது ப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது குறித்து உரையாடல் இடம் பெற்தாக கூட்டணி தரப்பில் தெரிவிக்க பட்டது.
ரணில் விக்கிரமசிங்க நாளை ரஷ்யா செல்ல உள்ளதால் இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்ய பட்டதாக கூறிய கூட்டணி தரப்பு, உள்ளுராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாட பட்டனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டது.