ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் வெற்றிபெறுவது சவால்மிக்கதாக அமையக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வரிசை யுகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவுக்கு கொண்டுவந்தார். நாட்டை மீட்டெடுப்பதற்குரிய அவரின் வேலைத்திட்டங்கள் சிறப்பாக உள்ளன. அதனால்தான் ரணிலுக்கு சார்பாக கருத்துகளை முன்வைத்துவருகின்றேன்.
நான் ஆளுங்கட்சி பக்கமா, எதிரணி பக்கமா என்பதைவிட மக்கள் பக்கம் நிற்கின்றேன் என்பதே முக்கியம். ஆளுங்கட்சியுடன் நான் இணையவில்லை. எனினும், கருத்தியல் ரீதியில் ஒருமைப்பாடு உள்ளது. அமைச்சரவையில் அமர்வதற்கு நான் தயாரில்லை.
சஜித் பிரேமதாசவே தற்போதைய எனது அரசியல் தலைவர். 80 காலப்பகுதி முதலே ரணிலுடன் செயற்பட்டுவருகின்றேன். எனவே, புதிதாக இணைவதற்கு ஒன்றுமில்லை.
ராஜபக்சக்களின் ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டால் வெற்றிபெறுவது சவாலாக அமையக்கூடும்.” – என்றார்.