‘ராஜபக்சக்களுக்கு தடை’ – கனடாவிடம் விளக்கம் கோரியது இலங்கை!

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து இலங்கை அரசு, கனடாவிடம் விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்னன் வெளிவிவகார அமைச்சுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles