ராஜபக்சக்கள் பதவி விலகியது தவறு – மொட்டு கட்சி செயலாளர்

” ராஜபக்சக்களின் அரசியல் வகிபாகம் நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான இலங்கையர்கள் இன்றும் உள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் பதவி விலகி இருக்ககூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ராஜபக்சக்கள் தாம் வகித்த பதவிகளில் இருந்து விலகியது தவறு என்பதே நான் உட்பட எமது கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் பேர் வாக்களித்தனர். அவரை நீக்கும் அதிகாரம் அந்த மக்களுக்கே உள்ளது. மாறாக வீதிக்கு இறக்கும் சுமார் ஒரு லட்சம் பேரால் அதை செய்ய முடியாது.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. எனவே, அவர் பதவி விலகியதும் தவறு. இந்நாட்டில் மக்கள் ஆசியுடன்தான் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பலவந்தமாக வந்ததில்லை. எமது கட்சி மக்களுடன்தான் உள்ளது. நாம் மக்கள் மத்தியில் செல்வோம். ராஜபக்சக்களின் தேசிய அரசியல் அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினோம். அரசியல் பற்றி பேசவில்லை. ஆனாலும் அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் அவர் இல்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles