ராஜபக்ச அரசை விரட்டும்வரை ஓயமாட்டோம்! சஜித் சூளுரை!!

” மக்களை வதைக்கும் இந்த சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்.”

இவ்வாறு சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

அரசுக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு சூளுரைத்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தடைகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி, துணிவுடன் மக்கள் அணிதிரண்டுள்ளனர். கடந்த இரு வருடங்களில் மக்கள் எல்லா வழிகளிலும் துன்பப்பட்டனர். இனியும் அந்த துன்பத்தை தாங்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, மக்களை இந்நிலைமைக்கு கொண்டுவந்த சூழ்ச்சிக்காரர்கள்தான் ராஜபக்ச அரசு, ராஜபக்ச குடும்பம். அந்த ஆட்சியை விரட்டியடிக்கவே நாம் அணிதிரண்டுள்ளோம். அந்த இலக்கை அடையும்வரை அறவழியில் எமது போராட்டம் தொடரும்.

ஊழல் அற்ற ஆட்சியையே நாம் உருவாக்குவோம். எவருடனும் டீல் இருக்காது. மக்களுடன்தான் எமக்கு டீல்.” – என்றார் சஜித்.

Related Articles

Latest Articles