மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் உயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று கூடவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை ஏற்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைப்புகளில் இருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த அழைப்பையேற்று, அரசை ஆதரிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என மலையக மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. து எத்தகையதொரு முடிவை எடுப்பது என்பது குறித்து இதன்போது ஆராய்ந்து – முடிவெடுக்கப்படவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என மலையக மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.