ரிஷாட், மனைவி, மாமனாருக்கு மறியல் நீடிப்பு – மச்சானுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே ரிஷாட், அவரின் மனைவி மற்றும் மாமனாருக்கு மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியை சித்திரவதைக்குள்ளாக்கியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை,  வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மைத்துனருக்கும், தரகருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles