கொழும்பு, வத்தளை பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினராலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 10 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










