பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஹங்குராங்கெத்த பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கேற்ப கொடுப்பனவாக மேலும் 350 ரூபா வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான கலந்துரையாடலே இடம்பெற்றுவருகின்றது. 1, 350 ரூபாவை பெற்றுக்கொடுக்க தெரிந்த எமக்கு 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பது ஒன்று பெரிய விடயமல்ல. மலையக மக்களுக்கான காணி உரிமையும் நிச்சயம் வென்றெடுக்கப்படும்.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் எஷ்.சதீஷ்