“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
“ தந்திரமான – நரித்தனமான அரசியல்வாதிகள் உள்ளனர் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதனை இதொகா நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” – எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மனோ கூறினார்.
ஆகவே, பொறுமையாக இருங்கள், சாதித்துவிட்டதாக கொக்கரிக்க வேண்டாம், அது பிழை. நிதானமாக செயற்படுங்கள். சம்பள உயர்வு என்பது இடைக்கால தீர்வுதான். எனவே, நரிகளிடம் ஏமாந்துவிட வேண்டாம் எனவும் மனோ குறிப்பிட்டார்.
