தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டகொடை தோட்டத்தைச் சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு, வட்டகொடை கீழ்பிரிவு மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அத்தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பி.கேதீஸ், வி.தீபன்ராஜ்










