ரூ.2000 ஐ நெருங்கியது கரட் விலை!

இன்றைய தினம் சந்தையில் ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது வரலாற்றில் கரட் ஒரு கிலோகிராமுக்கு பதிவான அதிகூடிய விலையாகும் என்று மேற்படி சங்கத்தின் தலைவர் ரோஹண பண்டார தெரிவித்தார்.

” கரட் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1,700 ரூபா அளவில் காணப்படுகின்றது.

அத்துடன் லீக்ஸ் ஒரு கிலோ  450 – 500 ரூபா அளவிலும் போஞ்சி ஒரு கிலோ 1,000 ரூபாவாகவும் பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும் காணப்படுகின்றது.” – எனவும்

அதிக மழையுடனான வானிலையினால் பயிர்ச்செய்கைகள் அழிவடைந்தமையே இதற்கான காரணமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ரோஹண பண்டார சுட்டிக்காட்டினார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விலைகள் குறைவடையலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles