லிந்துலையில் பாரிய மோசடி – போலி பாமசி – ஆய்வுகூடத்துக்கு சீல்

லிந்துலை பகுதியில் எவ்வித அனுமதியையும் பெறாத நிலையில் சட்டவிரோதமாக  இயங்கிய பார்மசி மற்றும் ஆய்வு நிலையம் (Lab) ஒன்று, பிரதேச சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு அந்நிலையத்தை  மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லிந்துலை பிரதேச  சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் கடந்த சில மாதங்களாக இயங்கி வந்த சட்டவிரோத ஆய்வுக்கூடம் மற்றும்  பாமஸியே  சுகாதார அதிகாரிகளினால் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இணைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ரேஷ்னி துரைராஜ்  , பார்மசி மற்றும் ஆய்வுக்கூடங்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கட்டாயம் பெற்றெடுத்தல் வேண்டும்.  அதேபோல் ஆய்வுக்கூடங்களை நடத்தி செல்லும்போது அங்கு பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் குறித்த நிலையத்தில் சுகாதார அமைச்சின் எவ்விதமான அனுமதிகளையும் பெறாத நிலையிலும் ஆய்வு கூட பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கு தேவையான தகைமைகளை கொண்டிராத ஊழியர்களையும் பயன்படுத்தியே குறித்த நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவித்தார்.

சாதாரண நபர்களைக் கொண்டு இவ்வாறான ஆய்வுக்கூடங்கள் நடத்த முடியாது என்றும் அதன் அடிப்படையிலேயே குறித்த நிலையத்தை முற்றுகையிட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆய்வுக்கூடத்தில் குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை பலர் முன்னெடுத்து இருந்த போதிலும் அதில ஒரு சிலருக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களைக் கொண்டு தமக்கு செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து  நுவரெலியா  மாவட்ட சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த ஆய்வுக்கூடம் நடைபெறும் இடத்திற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் இந்துலே போலீசார் உடன் சென்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் விந்துளைப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

 -கெளசல்யா-

Related Articles

Latest Articles