லுணுகலை, கைக்காட்டி சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பிபிலையிலிருந்து லுணுகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸொன்றும், லுணுகலையில் இருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 25 மற்றும் 30 வயதுகளுடைய
இரு இளைஞர்களும், லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் கொக்காகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பபதுடன் இவர்கள் இருவரும் லுணுகலை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றில் உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமு தனராஜா










