‘லொக்டவுன்’ செய்யப்பட்ட நிவ்போரஸ்ட் தோட்டம் விடுவிப்பு!

கொரோனா  வைரஸ் தாக்கத்தையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசன் 14 நாட்களுக்கு பின்னர் இன்று (20.10.2020) விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அப்பகுதியில் வாழும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இரு பெண்கள், கம்பளை, புபுரஸ்ஸ – மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் உள்ள தமது வீடுகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளனர்.

இந்நிலையில் மினுவாங்கொடை கொத்தணி பரவலையடுத்து இவ்விரு பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.  பீசீஆர் பரிசோதனையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது, இதனையடுத்து நிவ்போரஸ்ட் டிவிசனும் முடக்கப்பட்டது. புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில்  190 குடும்பங்கள் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles