மஹியங்கனை, பதியத்தலாவ வீதியில் ஒருபடிவெவ பாலத்திற்கு அருகில் லொறி ஒன்றில் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் யாரென இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.மரணித்த நபரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் 25 வயதுடைய மஹஓய பகுதியை சேர்ந்த லொறியின் சாரதி மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
