வசந்தவை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பிற்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரியாக 150 நாட்கள் ஆகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் போராட்ட மையத்திற்கு வருவதற்கு முன்னரே பொலிஸார் அவ்விடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles