வடகிழக்கை மேம்படுத்துவேன்!

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை. வடகிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி, வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 18 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மட்டக்களப்பு, ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மந்த போசனை நிலைமை அதிகரித்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. தேசிய போசாக்கு கொள்கையை நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தி, அவற்றிற்குத் தீர்வு காணுவோம். மந்த போசனையே இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தி அதனூடாக ஏற்படுகின்ற அபிவிருத்தியின் பிரதிபலனை மக்களுக்கு கிடைக்கச் செய்வதோடு, அதற்கு மேலதிகமாக கடன் மாபியா காரணமாக மக்களும் கடன் சுமைக்குள் சிக்கி இருக்கின்றார்கள். சூறையாடும் ஒன்லைன் கடன் மாபியாவில் இருந்து மக்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை அமைத்து இளைய தலைமுறையினரை அறிவாற்றலுடன் உருவாக்கி, அதனூடாக தொழில் வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்வோம். அதிகாரத்திற்கு வந்த உடனே புல்மோட்டையில் உள்ள கனிம மணல் வளத்தை நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்போம்.

புல்மோட்டையில் கனிம வளங்களை பயன்படுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அதிகபட்சமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles