வடக்கின் பெரும் சமர் ஆரம்பம்!

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி இருக்கின்றது.
இன்றைய போட்டியில் நாணாய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்து ஆடி வருகின்றனர்.
அந்த வகையில் மதிய போசன ஆட்ட இடைவேளைவரை மத்திய கல்லூரி அணியினர் 24 பந்து பரிமாற்றங்களை எதிர்கொண்டு 74 ஓட்டங்களை பெற்று 4 இலக்குகளை இழந்துள்ளனர்.
மத்திய கல்லூரி சார்பில் ஆர்.நியூட்டன் 24 ஓடங்களுடனும் கே.கேரிக்ஸன் 15 ஓட்டங்களயும் பெற்றுக் ஆட்டமிழந்துள்ளனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் அ.கவிசன் 4 பத்து பரிமாற்றங்களை வீசி 20 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை வீழத்தியுள்ளதுடன் எம்.ரண்டிபோ 4 பந்து பரிமாற்றங்களை வீசி 4 ஓட்டங்களை கொடுத்து 1 இலக்கினையும் வீழ்த்தியுள்ளார்.
களத்தில் எஸ்.சிமில்டன் 14 ஓட்டங்களுடனும் எஸ்.சயந்தன் 1 ஒட்டத்திடனும் களத்தில் உள்ளனர்.
 
மூன்று நாட்கள் கொண்ட போட்டியாக குறித்த கிரிக்கெட்போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
117 வது ஆண்டாக இந்த ஆண்டும் இந்த போட்டி இடம் பெறுகின்றது.

Related Articles

Latest Articles