வடக்கில் அடை மழை! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!!

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்து 256 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

490 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 25 தற்காலிக பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சீரற்ற காலநிலையால் 32 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 181 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles