ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு கள நிலைவரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அவருக்காக தீவிர பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கு, கிழக்குக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க, இவ்விரு மாகாணங்களிலும் ஜனாதிபதி ரணிலுக்கான வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது என சுட்டிக்காட்டி, அதற்குரிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, மிதக்கும் வாக்குகளை பெறுவதற்குரிய வியூகங்களே தற்போது தேவைப்படுகின்றன எனவும் ஜனாதிபதிக்கு பிரச்சார நடவடிக்கைக்கு பொறுப்பானவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
