வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. யோசனை

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமிழர்களை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்வாறு வழிநடத்துகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு” எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்து
கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 

மலையக மக்களுடைய 200 வருட வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுத வேண்டும் என்பதைப்பற்றி நாம் சற்றுச் சிந்திக்கவேண்டும். ஒரு புத்தகம் எழுதுவதாகவிருந்தால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். இந்தப் புத்தகத்தினை இரா.சுப்பிரமணியம் பல வேலைப் பழுக்களுக்கு மத்தியில் ஏன் எழுதினார் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஏன் எனில் கடந்த 200வருடங்களாக மலையக மக்கள் பட்ட துன்ப துயரங்களை ஒரு பதிவாக, இன்னும் பல்லாயிரம் வருடங்களுக்குப் பிற்பாடு தாம் பட்ட
துன்ப துயரங்களை தமது சமுதாயம் திரும்பிப் பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை வெறுமனே புத்தக வெளியிட்டு விழாவாக மாத்திரம் கருதமுடியாது.

புத்தகங்களை இங்கிருந்து வாங்கிச் சென்று, சில நாள்களுக்குப் பிற்பாடு அந்தப் புத்தகம் எங்கே என்று தெரியாத ஒரு சமூகக் கலாச்சார சூழலில்தான் நாம்
தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

புத்தகங்கள் படிக்கின்ற ஆற்றல் குறைந்து சமூக வலைத் தளங்களில் எமது பார்வைகள் அதிகமாகியிருக்கின்றன. ஆனால் புத்தகங்களில் இருக்கின்ற அந்த வரலாறுகளை நாங்கள் நிச்சயமாகப் படிக்கவேண்டும். எங்களுடைய வரலாறுகள் என்னவென்பதை நாம் அறிந்துகொள்ளவேண் டும்.எங்களுடைய முன்னோர்கள் எங்க
ளுக்காகப் பட்ட துன்பங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

அவ்வாறு அறிந்துகொண்டால்தான் நாம் சரியாக வாழமுடியும்.

எங்களுக்காக எங்களுடைய முன்னோர்கள் பட்ட துயரங்களை அறிந்தால்
நாம் சரியான சிந்தனையுடன், நாம் நல்ல வழிகளில் வாழ்வதற்கு எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்கள், துன்பங்கள் எமக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

அந்தவகையில் இந்த இரா.சுப்பிரமணியத்தை நான் வாழ்த்தி நிற்கின்றேன்.

ஒருவரலாற்றை பதிவிட்டு அனைத்து மக்களுக்கும் சென்று சேரக் கூடிய
வகையில் இந்தப் புத்தகத்தினை அவர் அமைத்திருக்கின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்பு நாம் இந்த மண்ணில் சுதந்திரமாக எமது
கலாச்சார அடிப்படையில், மத அடிப்படையில், இன அடிப்படையில், மொழி அடிப்
படையில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை வழிநடாத்துகின்ற, எம்மை துச்சமாக நினைக்கின்ற அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும்,
தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள்எம்மை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்வாறு வழிநடாத்துகின்றனர்.

ஆனால் தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு இல்லாமல் , வடக்கிற்கு வேறாக, கிழக்கிற்கு வேறாக, மலையகத்திற்கு வேறாக தமிழ் மக்கள் பிரிந்து நிற்கின்றனர்.
இது எமது முன்னோர்களுக்கு நாம் செய்கின்ற துரோகமாகவே பார்க்கிறேன்.

முடிந்தவரையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பயணிப்போம் – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles