ஹட்டன் – வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலம் (22) அன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற வட்டவளை பொலிஸார் துணி ஒன்றில் சுத்தி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதேநேரத்தில் இந்த சிசுவை பெற்ற தாய் தலைமறையாகிருந்த நிலையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர், உறவுமுறை மகள் ஒருவர் மற்றும் குழி பறிக்க உதவிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த தாய் டயகம பிரதேசத்தை சேர்ந்த (37) வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிசு புதைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார் சிசுவின் உடல் குழைத்து அதன் பாகங்கள் சிசுவின் உடல் பாகங்கள் உடல் கூற்று பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்.










