மஹியங்கனை, அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750 மில்லிலிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸபுர, கமகும்புர, மாபகதேவாவ பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் குளத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் சகிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக மஹியங்கனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ககிப்பு உற்பத்திக்கு பயன் படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.விஜேரத்னவின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் (67664) ஜயசேகர (67664) போக்கோ (81362) பிரேமரத்ன, போகோ (86956) மகேஷ் மற்றும் கற்போவா (9121) மலிகா ஆகியோர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்த சந்தேக நபரைக் (10) திகதி மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா