கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல பகுதியில் இன்று (07) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இபோச பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது










