வரலாற்று தவறை இழைத்துவிட்டது அரசு – ஒப்புக்கொண்டார் நிதி அமைச்சர்

வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய தருணத்தில், அதனை குறைத்து அரசு வரலாற்று தவறிழைத்துவிட்டது. சர்வதேச நாணய நிதியத்தை நாடும் முடிவை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். 50 மில்லியன் அமெரிக்க டொலரே தற்போது கையிருப்பில் உள்ளது.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கை தற்போதுதான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை முறையாக முகாமை செய்து, அதனை ஓர் ஆசிர்வாதமாக மாற்றிக்கொள்வதா அல்லது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, நிலைமையை மோசமாக்கி, வெனிசுலா, லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டதொரு நிலைமையை இங்கு ஏற்படுத்துவதா என்ற சவால் எம்முன் உள்ளது.

எமது நாட்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வரி வருமானம் 25 வீதமாக இருந்தது. இது தொடர்ச்சியாக குறைவடைந்து, தற்போது 8.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு அனைத்து அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும். மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்தபட்சம் 15 வீத வரிவருமானம் இல்லாவிட்டால், நாட்டை நிர்வகிப்பது கடினம்.

தற்போதைய நெருக்கடி நிலைமையை ஒரு மாதத்தில் தீர்ப்பேன் என நான் கூறியதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அவ்வாறு கூறுவதற்கு நான் முட்டாள் அல்லன். குறைந்தபட்சம் இரு வருடங்களாவது தேவை. இரண்டு வருடங்களா அல்லது 10 வருடங்களா என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில்தான் உள்ளது. தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய நிலையில் கையிருப்பில் உள்ளது.

வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய நேரத்தில், அதனை குறைப்பதற்கு எடுத்த முடிவு வரலாற்று தவறாகும். நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு தூண்டிலை வழங்குவதற்கு பதிலாக, மீனையே வழங்கும் நடைமுறையால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். முதலீடுகள் வரவேண்டும். அவசர நிதி உதவி குறித்து உலக நாடுகளுடன் பேச்சு நடத்திவருகின்றோம். உலக வங்கி வழங்கும் அவசர நிதியை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேச்சு நடத்துகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவடைய 6 மாதங்கள்வரை செல்லும். புதிய வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles