தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
‘ஒமிக்ரோன்’ வைரஸ் பரவல் உள்ளிட்டக் காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டுக்குழுவினருக்கும், பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.










