வவுனியாப் பல்கலை பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவி கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு 12.45 அளவில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் உள்நுழைந்துள்ளார்.

இதை அவதானித்த அங்கிருந்த முதல் வருட மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்குத் தொலைபேசியூடாக இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவத்தில் மனம் பதற்றமடைந்த நிலையில் மறுதினம் நோயினால் மரணமடைந்துள்ளதுள்ளார் என சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் விடுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வகுப்புப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை யிலும் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதி யில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இதேவேளை வவுனியா பூவரசன்குளம் பொலிஸில் இது தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய உள்ளாடையுடன் உள்நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles