வவுனியா பகுதியில் 9 பவுண் தங்கத்தை திருடிவிட்டு தலைமறைவான பெண்ணொருவர், பதுளை நமுனுகுல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நமுனுகுல, தண்ணகும்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வவுனியாவில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த 22ஆம் திகதி ஒன்பது பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் போது பதுளை நமுனுகல பகுதியில் வைத்து வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 26 கிராம் 360 மில்லிகிராம் நிறையுடைய தங்க உருண்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக எஞ்சிய தங்கம் நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்










