வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் வரையறை! புதிய நடைமுறை அறிவிப்பு!!

உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி மோட்டார் சைக்கிளொன்றுக்கு 1000 ரூபாவுக்கு உட்பட்ட அளவிலும், ஆட்டோவுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கு உட்பட்டதாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், வேன், ஜீப் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு உட்பட்டதாகவே எரிபொருள் விநியோகிக்கப்படும்.

சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரியப்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles