வாக்கு வேட்டைக்காகவே கனடாவில் இனவழிப்பு நினைவகம்!

“வாக்கு வேட்டைக்காகவே கனடா, பிரம்டன் மேயரால் இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழியை அவர் நிறைவேற்றியுள்ளனர். ” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

” பிரம்டன் பகுதியில் இனவழிப்பு தொடர்பான நினைவகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை 2021 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியிலும் இது விடயத்தில் மீண்டும் தலையிட்டோம். தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தோம்.

எனினும், அந்நாட்டு சட்டத்தின் பிரகாரமே அதனை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இனவழிப்பு வாரத்துக்கு எதிராக தடை உத்தரவு பெறுவதற்கு கனடாவிலுள்ள அமைப்பொன்று நீதிமன்றத்தை நாடியிருந்தாலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நினைவகம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழை. 2021 ஆம் ஆண்டில் இருந்தே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பிரம்டன் மேயர் வாக்கு வேட்டைக்காகவே இச்செயலை செய்துள்ளார். அப்பகுதியில் அதிகளவான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்.

புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, வேறொரு அமைப்பின் பெயரில்தான் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிராக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தோம். கனடாவின் புதிய அரசாங்கத்திடமும் தூதுவர் ஊடாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.” – என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles