புத்தல பகுதியில் வாவியில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
20 வயதிற்கும் குறைந்த மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று (14) மாலை ஆற்றில் குளிக்கச்சென்றிருந்த போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர்.
இந்நிலையில், மூவரின் சடலங்களும் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த இளைஞர்கள் மொனராகலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
